top of page

SANDILIPAY SRI AMMAN ARAKADDALAI

Sandilipay 02-2023 1.jpeg
Sandilipay 02-2023 2.jpeg
Sandilipay 02-2023 3.jpeg
Sandilipay 02-2023 4.jpeg
Sandilipay 02-2023 5.jpeg
Sandilipay 02-2023 6.jpeg
LATEST EVENT - February 16, 2023

தமிழ்

16/02/2023 இன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் மூளாய் பொன்னாலை நாராயணன் அறக்கட்டளை முறிகண்டி சிவயோகசுவாமிகள் ஆன்மீக அறக்கட்டளை வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியம் மற்றும் சிறி அம்மன் சண்டிலிப்பாய் ஆன்மீக அறக்கட்டளையும் இணைந்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் உள்ள கல்வளை கிராமத்தில் வசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 வலுவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் பிரதேச செயலர் ஓய்வுநிலை துணை வேந்தர் மோகன தாஸ் முறிகண்டி சிவயோக சுவாமிகள் அறக்கட்டளை பொருளாளர் திரு வைகுந்தன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களின் பங்கு பற்றுதலோடு 100 உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் இந்நிகழ்வில் மூளாய் பொன்னாலை அறக்கட்டளையால்,  பொன்னாலையில் இளம் தாய் தற்கொலை செய்து கொண்ட பின்னர் தாத்தா பாட்டி யுடன்  சார்ந்து வாழும்  சிறுவர்களின் பராமரிப்பு கல்வி உதவியாக  நிதியாக மாதாந்தம் 8000 /= வீதம் கொடுப்பனவாக 96000/- பேராசிரியர் மோகனதாஸ் பிரதேச செயலாளர் அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் கடந்த மாதங்களில் யாழ் மாவட்டத்தில் பிரதான பேசு பொருளாக தனியார் அரச வைத்தியர்களால் பிரேரிக்கப்படும் மருந்துச் சிட்டைக்கான மருந்தை கொள்வனவு செய்வதற்கான நிதி பொருளாதார நெருக்கடியால் சிறுபிள்ளைகளைக் கொண்ட வறுமைக்குட்பட்ட  குடும்பங்களுக்கு ஓரு பெரும் சுமையாக உள்ளது  என்ற சமூக கருத்தை அடிப்படையாக வைத்து  நோய்க்கு மருந்து வாங்க  இயலாத தன்மையுள்ள   சிறுவர்களுக்கான மருந்துச் செலவுக்காக வட்டுக்கோட்டை   பிரதேச பிரிவு (கொட்டைகாடு) வைத்தியசாலை வைத்தியர்  ரதனி அவர்கட்கு சித்தண் கேணி ஆன்மீக அறக்கட்டளையின் ஊடாக வழங்கப்பட்ட ரூபா 100,000 வைத்தியர் சமூகம் அளிக்காமையில் விருந்தினர்களால் மீண்டும் வைத்தியருக்கு வழங்கி வைக்க சித்தன்கேணி அறக்கட்டளைக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் உலர் உணவு திட்டத்திற்கு நிதியாளர்களான அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு ஈஸ்வரன் அவர்கள் வழக்கம்பரை  அம்பாள் அறக்கட்டளையின் ஊடாக 100,000 ரூபாவும் அமெரிக்காவில் வசிக்கும் Dr ரன்ஜிதன் அவர்கள் மூளாய் பொன்னாலை நாராயணன் அறக்கட்டளையூடாக 100000 ரூபாவும் மற்றும் 100000 ரூபாய் அவுஸ்ரேலியாவில் வசிக்கும்                        Dr திரு வல்லபன் முறிகண்டி சிவயோக சுவாமிகள் ஆன்மீக அறக்கட்டளை ஊடாக வழங்கி, வைக்கப்பட்டன. 96000 ரூபாய் அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் சிவன் சின்னையா அவர்களால் தவறான முடிவெடுத்து மரணித்த இளம் தாயின் குடும்பத்திற்கு வழங்குமாறு நிதியாளரால் வழங்கப்பட்டது. மருத்துவ உதவிக்காக அமெரிக்காவில் வசிக்கும்

Dr சபா குலதுங்கம் அவர்களால் 100000/ ரூபாயும் வழங்கி வைக்கப்பட்டன.

Sandilipay Livelihood to Distressed Woman.jpeg
Sandilipay Livelihood 3.jpeg
Sandilipay Livelihood 2.jpeg
Sandilipay Livelihood 4.jpeg
December 7, 2022

தமிழ்சண்டிலிப்பாயில் கணவனால் கைவிடப்பட்ட ஐந்து குழந்தைகளின் இளம் தாய்க்கு வாழ்வாதார உதவியாக 10 கோழிகளும், கோழிக்கூடும், கோழித்தீவனமும், ரொக்கப் பணமும் இன்று சண்டிலிப்பாய் ஸ்ரீ ஹரிஹரன் புத்திர ஐயனார் கோயில் முன்றலில் வழங்கப்பட்டன. சண்டிலிப்பாய் ஸ்ரீ அம்பாள் அறக்கொடை நிதியத்தினால், ஓய்வு நிலை விரிவுரையாளர் திருமதி.நாச்சியார் செல்வநாயகம், திரு.சங்கரன் பிள்ளை குகன், திருமதி.ரஜிதா சந்திரகுமார் (ஸ்கந்தவரோதயா ஆன்மீக அறக்கட்டளை), பொதுச் சுகாதார மருத்துவ உத்தியோகத்தர், சண்டிலிப்பாய் பிரதேச செயலக அலுவலர்கள் கலந்து கொண்டு அந்த இளம் தாய், பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் தேவையான உதவிகளை வழங்க உறுதியளித்ததுடன் மாதாமாதம் ரூபா 5000/- வழங்க திருமதி.நாச்சியார் செல்வநாயகம் முன்வந்தார்.

English: A young mother of five abandoned by her husband in Sandilipay was given 10 chickens, chicken feed, and cash as livelihood assistance at Sri Hariharan Putra Iyanar Temple in Sandilipay. The Sandilipay Sri Amman Arakaddalai, including retired lecturer Mrs. Nachiar Selvanayakam and Mr. Sankaran Pillai Gugan, as well as Mrs. Rajitha Chandrakumar (Treasurer of Skandavarodaya Aanmeega Arakaddalai) participated in the event to provide necessary assistance to the young mother and children in the future. The family will be receiving LKR 5000 per month. A Public Health Medical Officer and various Sandilipay Divisional Secretariat Officers were in attendance at this event.

Sandilipay 05-2022 1.jpeg
Sandilipay 05-2022 3.jpeg
Sandilipay 05-2022 2.jpeg
Sandilipay 05-2022 4.jpeg
May 3, 2022

தமிழ்: சண்டிலிப்பாயில் கணவனை இழந்த பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார். அவர் கட்டிய வீடு அரைகுறையாக உள்ளது.  அதன் கூரை வேலையை பூர்த்தி செய்ய உதவுமாறு சண்டிலிப்பாய் ஸ்ரீ அம்பாள் அறக்கொடை நிதியத்திடம் வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது.  திரு.சி.சிவசங்கர் அவர்களின் (அவுஸ்ரேலியா) அனுசரணையில் கூரை வேலை பூர்த்தி செய்வதற்கான உதவிகள் வழங்கப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் சிரமத்தின் மத்தியில் 1260 தட்டை ஓடுகள் 30 முகட்டு ஓடுகள் பெறப்பட்டு இன்று நிதியத்தின் உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டது. உதவும் கரங்களுக்கு நன்றிகள்.

Sandilipay 03-2022 1.jpeg
Sandilipay 03-2022 3.jpeg
Sandilipay 03-2022 5.jpeg
Sandilipay 03-2022 7.jpeg
Sandilipay 03-2022 2.jpeg
Sandilipay 03-2022 4.jpeg
Sandilipay 03-2022 6.jpeg
Sandilipay 03-2022 8.jpeg
March 17, 2022

தமிழ்:

சண்டிலிப்பாய் ஸ்ரீ அம்பாள் அறக்கொடை நிதியத்தினால் நடாத்தப்பட்ட சிரட்டையிலிருந்து கைப்பணிப் பொருட்களைச் செய்யும் பயிற்சியில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி இன்று நடைபெற்ற போது.

சண்டிலிப்பாய் ஸ்ரீ அம்பாள் அறக்கொடை நிதியம் நடாத்திய கைப்பணிப் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றபோது.

bottom of page