AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
MADDUVIL PANAYADI PILLAYAR
ARAKADDALAI
LATEST EVENT - August 30, 2022
தமிழ்:
30/08/2022 (செவ்வாய் கிழமை)
ஸ்ரீசுபகிருது வருடம் ஆவணி மாதம் பதின்நான்காம் திகதி இன்றைய தினத்தில்
முறிகண்டி- சிவயோகர் சுவாமிகள் ஆன்மீக அறக்கட்டளை நிதியத்துடன் இணைந்து மட்டுவில் பனையடி பிள்ளையார் ஆன்மீக அறக்கட்டளை உதயமும் வாழ்வாதார செயற்பாடுகளும் தென்னம் பிள்ளைகள் வழங்கும் நிகழ்வும். ஆவணி சதுர்த்திஐ முன்னிட்டு கோயில் அறங்காவலர் திரு சிறிஸ்கந்தராஜா மாஸ்டர் தலைமையில் இனிதே நடைபெற்றது
மக்களுக்கு சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்கு சேவை செய்கிறான் -சுவாமி விவேகானந்தர்-
சாவகச்சேரி- மட்டுவில் பிரதேசத்தில் வசிக்கும் பொருளாதார நலிவுற்ற குடும்பங்களினால் உதவி கோரப்பட்டுள்ள நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மட்டுவில் பனையடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு தலா 2000/= பெறுமதியான உலர் உணவு பொதிகள் 200 தென்னம்பிள்ளைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் வைத்தியர் நளாயினி சிவராமன் அவர்களது நிதிஉதவியில் அன்றைய தினத்திலிருந்து
பளை வேம்படி கேணி பிரதேசத்தை சேர்ந்த சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு அன்மையில் மறைந்த திரு தேவராஜா குடும்பத்தின் பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளுக்காக முதல் மாத கொடுப்பனவாக ரூபா-5000/= சிறிஸ்கந்தராஜா மாஸ்டரால் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் மாதாந்தம் 5000 ரூபா பனையடி பிள்ளையார் அறக்கட்டளை NSB வங்கியூடாக அக்குடும்பத்தின் NSB கணக்குக்கு வங்கிவைப்பிலிடப்படும் என்றும் கூறப்பட்டது.
இவ் நிகழ்வுகளுக்கு நிதியாளர்களான திரு குமரன் அவர்களின மகனும் இளம் பொறியியலாளார் திரு சத்தியா அவர்களும் கலாநிதி ரவிச்சந்திரன் அவர்களும் இளம் பொறியியலாளர் திரு சின்னையா குகன் அவர்களும் அத்துடன் Dr நளாயினி சிவராமன் அவர்களின் இணைந்த நிதிக்கும் நன்றி கூறப்பட்டது. என்பதோடு இவ் இளம் பொறியியலாளர்களின் முதல் மாத சம்பள பணத்தின் ஒரு பகுதியே இங்கு பயன்படுத்தப் பட்டது என்றும் கூறப்பட்டது. அத்துடன் அறக்கட்டளை அமைப்பின் தலைவராக சிறிஸ்கந்தராசா அவர்களும் பொருளாளராக பிரதீபன் அவர்களும் செயலாளராக திரு மோகன் அவர்களும் போசகர்களாக வைகுந்தன் ஓய்வுபெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் திரு கயிலைநாதன் Sir அவர்களையும் நியமிப்பதாகவும் இக்கிழமைக்குள் NSB வங்கியில் க/கு திறப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது நன்றி