AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
SANGARATHTHAI PATHIVAKAALI AMMAN ARAKADDALAI
LATEST EVENT - November 22, 2022
தமிழ்:
இன்று 22/11/22 செவ்வாய் கிழமை சங்கரத்தை அம்பாள் அறக்கட்டளையின் சேவையில்
மா/கி/அ/சங்க முன்பள்ளி மாணவர்களுக்கு ஜேர்மனியில் வசிக்கும் திருமதி. பிரபாகரி அம்மையாரின் நிதி உதவியில் (ரூபா85,230/=) 50 சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது .
இன்நிகழ்விற்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ,கிராம அலுவலர்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ,உப தபாலதிபர்,
சின்னம்மா வித்தியாலய அதிபர்,இந்துவாலிபர்சங்க பொறுப்பாளர் நன்கொடையாளரின் உறவினர் திரு. அருசன் ஆகியோர் கலந்து கொண்டு சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள். சங்கரத்தை கிராமமானது வறுமைக்குட்பட்டதும் அதன் விளைவாக போதைப்பொருள் பாவனையும் குழு மோதல்களும் அதிகரித்தலும் மற்றும் கடந்த சூரன்போர் தினமன்று நடந்த குழு மோதல்களால் உடல் உள பாதிப்புகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் தற்போதய பொருளாதார நெருக்கடிக்கு இவ்வுதவியானது பாரியளவு உதவும் என்பதோடு
இக்கைங்கரியத்தை ஆற்ற வழிகாட்டியாகவும் ஒருங்கிணைப்பாளருமான அமெரிக்காவில் வசிக்கும் பொறியியலாளர் சின்னையா அவர்களுக்கும் நிதி உதவி வழங்கிய திருமதி. பிரபாகரி அம்மையார் அவர்களுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல சங்கரத்தை பத்திரகாளியம்மன் அருள் கிடைக்க பிரார்த்திப்பதோடு அவர்களுக்கு அறக் கட்டளை சார்பாகவும் ,மாதர்சங்கம் சார்பாகவும்,முன்பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் சார்பாகவும் நன்றியினைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்❤️ நன்றி🙏
July 23, 2022
தமிழ்:
இன்று 23/07/2022 சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு சங்கரத்தை அம்பாள் அறக்கட்டளையும் சித்தங்கேணி ஆன்மிக அறக்கட்டளையும் ஒருங்கிணைந்து வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட கிராம சேவகரால் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் தலா 2000/= ரூபா பெறுமதியானவற்றை வழங்கிவைத்தார்கள். அத்துடன் 40000/= ரூபா பெறுமதியான 2 கோழிக்கூடுகளும் வளர்ந்த கோழிக்களும் ஒரு மாதத்துக்கான கோழி தீவனங்களும் இரண்டு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கி வைக்கப்பட்டன.
ஏற்கனவே வடக்கம்பரை அம்பாள் அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வங்கியில் வைப்பில் இடப்பட்டிருந்த நிதியில் இருந்து உலர் உணவுப் பொதிகளும். செல்வன் கணன் சின்னையா ( USA)அவர்களின் நிதி உதவியில் 2 கோழிக்கூடுகளும் கோழிக்களும் கோழித்தீவனங்களும் வழங்கப்பட்டது. தற்போது எமது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியான சூழ் நிலையில் இவ்வாறான உதவிகளை ஏணைய ஆலயங்களும் பாடசாலைகளும் தர்ம இஷ்தாபானங்களும் மென்மேலும் செய்து வறிய மக்களின் உயிர் காக்கமுன் வரவேண்டும். என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டது. இன்றைய நிகழ்வினை திறன்பட நடாத்தி முடிக்க உதவிய அனைவருக்கும் சங்கரத்தை அம்பாளின் அருள் கிடைக்க பிராத்திக்கின்றோம். இன்றைய நிகழ்வினை நடாத்துவதற்கு முன் நின்று உதவிய காரைநகர் தன்னை சித்தி விநாயகர் அறக்கட்டளையின் தலைவர் குகன் அவர்களுக்கும் நன்றிகள்.