top of page

INUVIL KANTHAN ARAKADDALAI

Inuvil Kanthan 04-2023 1.jpeg
Inuvil Kanthan 04-2023 2.jpeg
Inuvil Kanthan 04-2023 3.jpeg
Inuvil Kanthan 04-2023 4.jpeg
LATEST EVENT - April 14, 2023

தமிழ்இன்று 14.04.2023 தமிழ் புத்தாண்டு தினத்தில் இணுவில் கந்தன் அறக்கட்டளையும், நந்தாவில் நீங்காமூலை காளியாச்சி அறக்கட்டளையும், ஒருங்கிணைந்து இணுவில் கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் பின்வரும் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டன.

1. வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம்/ அப்பியாசக்கொப்பிகள் இணுவில் மத்திய கல்லூரியில் இருந்தும் இணுவில் இந்துக்கல்லூரியில் இருந்தும் தலா 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.நிதி அனுசரணை 130,000/= நந்தாவில் நீங்காமூலை காளியாச்சி அறக்கட்டளை.

2. அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கல்.ரூபா 2 இலட்சம் பெறுமதியான மருந்துகள் இணுவில் , கோண்டாவில் ஆதார வைத்தியசாலை மருத்துவர்கள் , நலன்புரி சங்க அங்கத்தவர்களிடம் கையளிக்கப்பட்டன. நிதி அனுசரணை :1 இலட்சம் Dr.சபா குலோதுங்கம்(அமெரிக்கா),1 இலட்சம் Dr.ரஞ்சிதன் (அமெரிக்கா) சித்தங்கேணி ஆத்மீக அறக்கட்டளை ஊடாக.

3. பொருளாதாரத்தில் பின்தங்கிய / தகப்பனை இழந்த பல்கலைக்கழக மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கல் . நிதி அனுசரணை : மறைந்த யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியர் பண்டிதர் வே.சண்முகலிங்கம் அவர்களின் மாணவன் (1983 GCE A/L) ஞானச்சந்திரமூர்த்தி சின்னையா (பொறியியலாளர், அமெரிக்கா)வின் புதல்வர்கள் வைத்தியர் சிவன் சின்னையா (அமெரிக்கா) பொறியியலாளர் குகன் சின்னையா (அமெரிக்கா).

 

 இவ் வைபவத்தில் திரு.அ.பஞ்சலிங்கம் முன்னால் அதிபர் யாழ் இந்துக்கல்லூரி ,திரு இ. இளங்கோவன் செயலாளர் ஜனாதிபதி செயலகம், பேராசிரியர் மகேஸ்வரன் எஸ்.இளங்கோ அதிபர் மானிப்பாய் இந்துக்கல்லூரி,திரு .பொ.மகேஸ்வரன் முன்னால் கணித ஆசான் (திருநெல்வேலி ஆன்மீக அறக்கட்டளை தலைவர்)  , Dr. திலக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். தொடர்பாடல் இல:  0773867458

bottom of page