top of page

ALAVEDDY SUBRAMUNIYA SWAMI

ARAKADDALAI

Alaveddy 03-2023 1.jpeg
Alaveddy 03-2023 2.jpeg
Alaveddy 03-2023 3.jpeg
Alaveddy 03-2023 4.jpeg
LATEST EVENT - March 22, 2023

தமிழ்: 22ம் திகதி பங்குனி மாதம் 2023 இன்று அளவெட்டி சுப்பிரமுனிய சுவாமிகள் ஆச்சிரமத்தில் அளவெட்டி சுப்பிரமுனிய சுவாமிகள் ஆன்மீக அறக்கட்டளை மற்றும்  சித்தன்கேணி ஆன்மீக அறக்கட்டளை உறுப்பினர்களால் யாழ் பல்கலைக்கழக வறுமைக்குட்பட்ட . மாணவி ஒருவருக்கு 100.000 ரூபா பெறுமதியான hp மடிக்கணனியும் 30 மாணவர்களுக்கு 40500/- ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கபட்டன. இன் நிகழ்வின் நிதியாளர்களாக அமெரிக்கா வாசிங்டன் முருகன் கோயில் தொடக்கம் தாயக கோயில்களின் அபிவிருத்திக்கு நிதியாளராகவும் சிவயோக சுவாமிகள் மற்றும் அவர் வழிவந்த சுப்பிரமுனிய சுவாமிகளின் நெறிமுறைகளைப் பின்பற்றுபவரும் மாமனிதர் மறைந்த பேராசிரியர் துரைராஜா அவர்களின் மாணவருமான அமெரிக்கா வாசிங்டனில் வசிக்கும் பொறியியல் கலாநிதி சிவகுமாரன் அவர்களால் 100000 ரூபா மடிக்கணனிக்காக நிதி வழங்கப்பட்டதோடு ரொரோண்டோவில் வசிக்கும் திருமதி பரிமளா சிவம் அவர்கள் 20 மாணவர்களுக்காக 27000/- ரூபாவும் அளவெட்டி சுப்பிரமுனிய சுவாமி ஆன்மீக அறக்கட்டளை 10 மாணவர்களுக்காக 13500/-  பெறுமதியான அப்பியாசக் கொப்பிகளுக்கும் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Alaveddy 04-2022 1.jpeg
Alaveddy 04-2022 3.jpeg
Alaveddy 04-2022 5.jpeg
Alaveddy 04-2022 2.jpeg
Alaveddy 04-2022 4.jpeg
Alaveddy 04-2022 6.jpeg
April 18, 2022

தமிழ்: அளவெட்டி சுப்பிரமணிய சுவாமி கள் ஆன்மீக அறக்கட்டளை பின்னால் வாழ்வாதார உதவி யாக இரண்டு பெண் தலைமைத்துவ குடும்பங் களுக்கு கோழிக்கூடுகளும் தலா வளர்ந்த 10கோழிகளும் மற்றும் இரண்டு ஏழ்மை நிலையில் உள்ள இரு குடும்பங்களுக்கு தலா 10கோழிகளும் நரசிங்க வைரவர் ஆலயமுன்றலில் காலை 10:00 மணிக்கு நிர்வாக சபை உறுப்பினர் களின் பங்குபற்றும் வுடன் வழங்கப்பட்டன  இரண்டு கோழிக்கூட்டின் பெறுமதி-40000 ரூபா 40கோழிகளின் பெறுமதி 30000 ரூபா மற்றும் இந்நிகழ்வின் படங்களும் இணைக்கப்படுகிறது        (செயலர்; அளவெட்டி சுப்பிரமணிய சுவாமிகள் ஆன்மீக அறக்கட்டளை)

Alaveddy 02-2022 1.jpeg
Alaveddy 02-2022 3.jpeg
Alaveddy 02-2022 2.jpeg
Alaveddy 02-2022 4.jpeg
February 2, 2022

தமிழ்: நேற்றைய தினம் அளவெட்டி சுப்பிரமணிய சுவாமி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் மூலம் அளவெட்டி யில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த நாற்ப்பந்தைந்து (45) பயனாளிகளுக்கு அமெரிக்கா நாட்டில் வசிக்கும் திருவாளர்கள் சின்னையா மற்றும் தெய்வகுமாரன் அவர்களின் நிதியுதவியில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது இதற்கு சகல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

bottom of page