AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
CHULIPURAM VICTORIA COLLEGE
ARAKADDALAI
LATEST EVENT - November 10, 2022
தமிழ்:
இன்று 10/11/22 வியாழக்கிழமை விக்ரோறியா ஆன்மீக அறக்கட்டளையால் விக்டோரியா கல்லூரி பொதுமண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சத்திய குமாரி சிவகுமார் தலைமையில் போதைஐ விட்டொழிப்போம் பசுமை நேயத்தோடு வளருவோம் என்ற தொனிப்பொருளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வும் தென்னம்பிள்ளை பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரும் இக்கல்லூரியின் பழைய மாணவியுமான திருமதி வீரமங்கை அவர்களும் தென்னைப் பயிர்செய்கை சபை பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன். முன்னாள் ஓய்வு நிலை அரச அதிபர் திரு வேதநாயகம் ஓய்வுநிலை கலைத்துறை பேராசிரியர் நாச்சியார் , ஓய்வுநிலை முன்னாள் விக்ரோறியா கல்லூரி அதிபர் சிறிகாந்தன் அவர்களும் மற்றும் இந்து சைவாலய மற்றும் சக்தி அமைப்பின் பிரதானியுமான திரு விக்கினேஸ்வரன். பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்துகள் வழங்கப்பட்டதோடு இவ்வாறான நிகழ்வுகளை தெரடர்ச்சியாக கல்லூரி கல்வி சமூகமும் பழைய மாணவர்களும் பொறுப்பேற்று நடாத்த வேண்டும் என்ற வேண்டுகோளுடன் 400 தென்னம் பிள்ளைகளும் 200 விதைப் பக்கட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இந்நிகழ்வின் நிதியாளரான திருஈஸ்வரன் மெல்போர்ன் அவர்களின் மைத்துனரான USA சிக்காக்கோ வில் வசித்தவரும் 58 வயதில் இவ்வுலகை விட்டு மறைந்த வைத்தியர் குமாரசூரியர் அவர்களின் நினைவுகூறலை முன்னிட்டு வழங்கப்பட்ட நிதியின் ஊடாகவே இந்நிகழ்வு நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வில் சித்தன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான பெண் தலைமை குடும்பத்திற்கு ஒரு தையல் இயந்திரம் பாடசாலை அதிபராலும் அறக்கட்டளை உறுப்பினர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வின் நிதியாளரான விக்டோரியா கல்லூரியின் பழைய மாணவரும் ரொரோண்டோவைச்சேர்ந்த திரு முத்துக்குமாரசுவாமி சுதர்சன் அவர்கள் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.