AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
VAVUNIYA SARVAMATHA
AANMEEGA ARAKADDALAI
LATEST EVENT - December 19, 2022
தமிழ்:
மாமனிதர் அழகையா துரைராஜா அவர்களின் 28வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக வவுனியா சர்வமத ஆன்மீக அறக்கட்டளையால் 19.12.22 திங்கட்கிழமை ( தெரிவு செய்யப்பட்ட இரண்டு பெண் தலைமை குடும்பத்தைச் சார்ந்த 2 பயிற்சி பெற்ற பெண்களுக்கு 2 தையல் இயந்திரங்களும் நிகழ்வில் பங்கு பற்றியவர்களுக்கு 60 தென்னம் பிள்ளைகளும் 30 விதைப் பக்கட்டுகளும் இவ் அறக்கட்டளையின் பொருளாளரும் தென்னை பயிர்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன், இவ் அறக்கட்டளையின் போசகரும் RDA திட்ட பணிப்பாளருமான பொறியியலாளர் திரு வதன குமார், Media இணைப்பாளா திரு கலையரசன் ஆகியோரினால் தையலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது பொருளாதார நெருக்கடியின் காரணமாக Singer machine Co கால தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந் நிகழ்வின் நிதியாளர் ஆன சிங்கப்பூரில் வசிக்கும் பொறியியலாளர் திரு பியசங்கா அவர்களுக்கும் அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் திரு தேவகுமார் அவர்களுக்கும் வைத்தியர் ரஞ்சிதன் அவர்களுக்கும் மறைந்த வைத்தியர் லவன் குடும்பத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் அரச ஓலிபரப்பு நிலையத்தின் செய்திப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒலி ஒளி பதிவுகளை காணொளியின் 20.44 நிமிடத்தில் இருந்து காணலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
June 10, 2022
தமிழ்:
இன்று 10ம் திகதி ஆனி மாதம் வெள்ளிக்கிழமை மாமனிதர் அழகையா துரைராஜா அவர்களின் 28வது சிரார்த்த தினத்தையும் வைத்தியர் சமூக ஆர்வலர் மறைந்த செல்வரத்தினம் லவன் அவர்களினதும் நினைவு நாளை முன்னிட்டு வவுனியா பல்கலைக் கழகத்தின் வேந்தர் திரு மோகனதாஸ் . வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் திரு தினேஸ்வரன் எந்திரி வதன குமார் தென்னை பயிர்ச்செய்கை சபை பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன் அவர்களின் பங்களிப்புடன் வவுனியா சர்வமத ஆன்மீக அறக்கட்டளை. உருவாக்கப்பட்டது. தலைவராக விருட்சம் அமைப்பின் தலைவர் திரு சந்திரகுமார் செயலாளராக பல்கலைக்கழக உதவி பதிவாளர் செல்வராசா பொருளாளர் திரு வைகுந்தன் அவர்களும் உறுப்பினர்களாக பியதாச . சிவரூபன், ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிற்கும் ஒருவராகவும் . போசகர்களாக fதினேஸ்குமார் மோகனதாஸ், வதன குமார் அவர்களும் தெரிவு. செய்யப்பட்டனர் இந்நிகழ்வில் 5 பெண் தலைமை குடும்பங்களுக்கு கோழிக்கூடுகளும் தலா 10 கோழிகளும் மரவள்ளிக் கட்டைகளும் முருங்கை தடிகளும் விதைப்பைகளும் தென்னம் பிள்ளைகளும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் கற்குளம் கிராமத்தில் பெண் தலைமையுடைய 2 குடும்பங்களுக்கு 2 தையல் இயந்திரம் வழங்க முற்பணம் Singer Company இற்கு கொடுக்கப்பட்டுள்ளது . அத்துடன் 2 நலிவுற்ற குடும்பத்தின் பாடசாலை பிள்ளைகளுக்கு மாதாந்த கல்வி உதவியாக ஆரம்ப நிதியாக 3000/ ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது இந்நிகழ்வில சர்வ இன மதங்களை சேர்ந்த மக்களும் பங்களிப்பு செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, இந் நிகழ்வின் நிதியாளர் ஆன சிங்கப்பூரில் வசிக்கும் பொறியியலாளர் திரு பியசங்கா அவர்களுக்கும் அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் திரு தேவகுமார் அவர்களுக்கும் வைத்தியர் ரஞ்சிதன் அவர்களுக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மறைந்த வைத்தியர் லவன் குடும்பத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது