AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
MOOLAI-PANNALAI NAARAAYANAN
ARAKADDALAI
LATEST EVENT - March 13, 2022
தமிழ்:
மூளாய்-பொன்னாலை நாராயணன் அறக்கட்டளை நிதியம் (திரு. சி. ரங்கராஜா ஞாபகார்த்தம்), தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை ஊடாக பெரிய அளவில் வாழ்வாதார உதவிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த உதவிகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர். சபா குலதுங்கம், டாக்டர். ரஞ்சிதன் (அமெரிக்கா), சிவன் சின்னையா (அமெரிக்கா), பரிமளம் சிவம் (கனடா) ஆகியோரின் முழுப் பங்களிப்புடன் வாழ்வாதார உதவிகளாக 3 பேருக்கு கோழிகளும், கூடுகளும், சிறப்புத் தேவை உடையோர் இருவருக்கு சக்கர நாற்காலியும், ஆடும், குட்டிகளும், தையல் இயந்திரம் ஒன்றும், சிவன் சின்னையாவின் மாதாந்தக் கொடுப்பனவாக ரூபா. 8000 படி ஒரு வருடத்திற்கான பணமும் இன்று பொன்னாலை நாராயணனின் ஆசியுடன் அக்கோவிலின் பிரதம குருவின் ஆசியும், வழிநடத்தலுடனும் இக் கிராம சேவையாளரினால் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலுடன் அளவெட்டி சுப்பிரமணிய சுவாமிகள் அறக்கட்டளையின் தலைவரும், மூளாய்-பொன்னாலை நாராயணன் அறக்கட்டளையினரும், வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளையினரும் இணைந்து இவ் வைபவத்தை இக் கால சூழ்நிலையில் மிக சிறப்பாக நடாத்தி முடித்தனர். காலத்தின் தேவையாக இவ் வைபவம் இருப்பதையும், இப்படியான பல நற் காரியங்களை செய்ய வேண்டும் என்பதையும் பிரதம குரு தனது ஆசியுரையில் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வைபவத்தின் கொடையாளிகள் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பாகவும், பயனாளிகள் சார்பாகவும் எல்லாம் வல்ல நாராயணனின் கடாட்சம் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துவோம். ஓம் நமோ நாராயணா.
செயலாளர் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியம்