top of page

HARTLEY COLLEGE

ARAKADDALAI

Hartley 10-2022 1.jpeg
Hartley 10-2022 2.jpeg
Hartley 10-2022 3.jpeg
Hartley 10-2022 4.jpeg
LATEST EVENT - October 12, 2022

தமிழ்

இன்று 12/10/22 புதன்கிழமை வடமராட்சி ஆன்மீக அறக்கட்டளை உறுப்பினர்களால் ஹாட்லிக் கல்லூரி பொதுமண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு கலைச்செல்வன் தலைமையில் போதைஐ விட்டொழிப்போம் பசுமை நேயத்தோடு வளருவோம் என்ற தொனிப்பொருளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வும் தென்னம்பிள்ளை பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்னைப் பயிர்செய்கை சபை பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன். வைத்திய கலாநிதி சுதாகரன் கதிரியக்க விசேட உடல் உள நிபுணர் மந்திகை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கல்லூரி பழைய மாணவர் மற்றும் இந்து சைவாலய மற்றும் சக்தி அமைப்பின் பிரதானியுமான திரு விக்கினேஸ்வரன். முன்னால் ஓய்வு நிலை விவசாய பணிப்பாளர் அறக்கட்டளை போசகருமான திரு வன்னியகுலசிங்கம். ஓய்வு நிலை கல்வி ஆலோசகர் சிவப்பிரகாசம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்துகள் வழங்கப்பட்டதோடு இவ்வாறான நிகழ்வுகளை தெரடர்ச்சியாக கல்லூரி கல்வி சமூகமும் பழைய மாணவர்களும் பொறுப்பேற்று நடாத்த  வேண்டும் என்ற வேண்டுகோளுடன் 400 தென்னம் பிள்ளைகளும் 200 விதைப் பக்கட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இந்நிகழ்வின் நிதியாளரான திருஈஸ்வரன் மெல்போர்ன் அவர்களின் மைத்துனரான USA சிக்காக்கோ வில் வசித்தவரும் 58 வயதில் இவ்வுலகை விட்டு மறைந்த வைத்தியர் குமாரசூரியர் அவர்களின் நினைவுகூறலை முன்னிட்டு வழங்கப்பட்ட நிதியின் ஊடாகவே இந்நிகழ்வு நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

bottom of page