AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
VADAMARACHI
AANMEEGA ARAKADDALAI
LATEST EVENT - November 23, 2022
தமிழ்:
இன்று 23.11.2022 புதன்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் உள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உயரப்புலம் கிராமத்தில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு தலா 6000/- ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் ஒரு தென்னை மரமும் பயிர் விதைப் பைக்கட்டுகளும் வடமராட்சி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் பேராசிரியர் அழகையா துரைராஜா அவர்களின் ஞாபகார்த்தமாகவும் கொழும்புத்துறை சிவயோகசுவாமிகள் ஆன்மீக அறக்கட்டளைகளால் வழங்கப்பட்டதோடு இந் நிகழ்வில் முன்னாள் ஓய்வு நிலை அரச அதிபர் திரு வேதநாயகம். பிரதேச செயலகர் . தென்னை பயிர்ச்செய்கை சபை பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் திரு பிரேம ரஞ்சன் பொருளாளர் தின்னவேலி ஆன்மீக அறக்கட்டளை மற்றும் போதைப் பொருள் பாவனையில் இருந்து விடுபட்டு பொதுவாழ்க்கையில் ஈடுபடும் இரு இளைஞர்கள் ஆகியோரின் பங்களிப்பிலும் .இந்நிகழ்வு நடைபெற்றதோடு இவ் நிகழ்வின் நிதியாளரான ரொரோண்டோவில் வசிக்கும் பொறியியலாளர் சத்தியேந்திரன் மற்றும் திருமதி பரிமளா சிவம் அவுஸ்ரேலியா மெல்போல்ன் இல் வசிக்கும் திரு ஈஸ்வரன் அவர்களும் இணைந்து நிதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்நிகழ்வில் போதைப்பொருள் பாவனைக்குட்பட்ட நபரின் குடும்பத்தின் பிள்ளைக்கு பாடசாலை செல்ல ஒரு துவிச்சக்கரவண்டி தின்னவேலி ஆன்மீக அறக்கட்டளையில் வாழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் நிதியாளரான லண்டனில் வசிக்கும் திரு ரவீந்திரன் செல்வராஜா அவர்களுக்கும் இந்நிகழ்வுகளின் பிரதான இணைப்பாளரான அமெரிக்காவில் வசிக்கும் பொறியியலாளர் திரு சின்னையா அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
October 12, 2022
தமிழ்:
12/10/22 புதன்கிழமை வடமராட்சி ஆன்மீக அறக்கட்டளை உறுப்பினர்களால் அல்வாய் தெற்கு சிறிலங்கா பாடசாலை அதிபர் மண்டபத்தில் கல்லூரி அதிபர் தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வும் தென்னம்பிள்ளை பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில இந்து சைவாலய மற்றும் சக்தி அமைப்பின் பிரதானியுமான திரு விக்கினேஸ்வரன். முன்னால் ஓய்வு நிலை விவசாய பணிப்பாளர் அறக்கட்டளை போசகருமான திரு வன்னியகுலசிங்கம். ஓய்வு நிலை கல்வி ஆலோசகர் சிவப்பிரகாசம் ஸ்கந்தவரோதயம் ஆன்மீக அறக்கட்டளை பொருளாளர் திருமதி சந்திரகுமார், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்துகள் வழங்கப்பட்டதோடு 400 தென்னம் பிள்ளைகளும் 200 விதைப் பக்கட்டுகளும் பாடசாலை மாணவ பெற்றேருக்கு வழங்கி வைக்கப்பட்டன. இப் பாடசாலையானது முற்று முழுதாக கரையோரம் சார்ந்த மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள் என்றும் அனேகமான மாணவ பெற்றார்கள் வறுமை மற்றும் மது, போதை வஸ்துகளுடன் தொடர்புகள் கொண்டவர்கள் என்றும் தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அவர்களது எண்ணங்களை மாற்றமுடியும் என்ற அதிபர் அவர்களின் முடிவுரையோடு இந்நிகழ்வின் நிதியாளரான திரு ஈஸ்வரன் மெல்போர்ன் அவுஸ்ரேலியா அவர்களின் மைத்துனரான USA சிக்காக்கோ வில் வசித்தவரும் 58 வயதில் இவ்வுலகை விட்டு மறைந்த வைத்தியர் குமாரசூரியர் அவர்களின் நினைவுகூறலை முன்னிட்டு வழங்கப்பட்ட நிதியின் ஊடாகவே இந்நிகழ்வு நடாத்தப்பட்டது என்றும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
June 24, 2022
தமிழ்:
24/06/22 வெள்ளி 10.30 மணியளவில் பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா அவர்களின் நினைவுகூரல், முன்னால் ஹாட்லி கல்லூரி அதிபர் திரு பாலசிங்கம் அவர்களின் மகனும் மாமனிதர் துரைராஜா அவர்களின் மாணவனும் பொறியியல் கலாநிதியுமான சமூக சேவையாளருமான மறைந்த பேராசிரியர் பாலசிங்கம் முகுந்தன் அவர்களின் நினைவாக வடமராட்சி ஆன்மீக அறக்கட்டளையால் ஹாட்லிக் கல்லூரி அதிபர் திரு கலைச்செல்வன் அவர்களின் தலைமையில் கல்லூரியில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 5 மாணவர்களைச் சேர்ந்த பெற்றோருக்கு 3 கோழிக்கூடும் 30 இரண்டு மாத கோழிகளும் ஒரு தையல் இயந்திரமும் ஒரு ஆடும் மற்றும்100 மாணவர்களைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு தலா 2 தடிகள் வீதம் மரவள்ளிக்கட்டைகளும் முருங்கைத் தடிகளும் ஒன்றுப் படி 100 தென்னம் பிள்ளைகளும், 2 படி 200 தேங்காய்களும் வடமராட்சி ஆன்மீக அறக்கட்டளை உறுப்பினர்களாலும் முன்னாள் அரச அதிபர் திரு வேதநாயகம் . ஓய்வுபெற்ற கலைத்துறை பேராசிரியர் நாச்சியார் அம்மா. Prof நடராஐசுந்தரம் முன்னாள் உடுப்பிட்டி மிசன் பாடசாலை அதிபர் திரு தர்மலிங்கம் . பாடசாலை பிரதி அதிபர் ' . தென்னைப் பயிர்ச்செய்கை சபை பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன். இமை மீடியா ரவி மயூரன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் நிதியாளர்களான கனடாவில் வசிக்கும் திரு திருமதி செல்வன் மஞ்சு துரை மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் DR. ரஞ்சிதன் திரு தெய்வகுமரன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் காரைநகர் தன்னை சித்தி விநாயகர் அறக்கட்டளை உறுப்பினர் திரு குகன் அவர்கள் எரிபொருள் நெருக்கடி மத்தியிலும் வட்டுக்கோட்டையில் இருந்து கோழிக்கூடுகளையும் ஆட்டையும் உரிய நேரத்தில் வழங்கி வைத்தமைக்காக நன்றி செலுத்தப்பட்டது
April 26, 2022
தமிழ்:
26/04/2022 செவ்வாய்க்கிழமை
பிலவ வருடம், சித்திரை மாதம் 13ம் நாள் ஏகாதசி விரத நன் நாளிலே திருநாவுக்கரசர் குருபூசை தினமாகிய இன்று பருத்தித்துறை- இராமகிருஷ்ண மிசன் சாரதா நலன்புரி நிலையத்தில் வடமராட்சி ஆன்மீக அறக்கட்டளை நிதியத்தினரால் வடமராட்சி பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட நலிவுற்ற குடும்பங்கள் சிலவற்றுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில் கனடாவில் வசிக்கும் திரு சிவா சிவக்கொழுந்து அமெரிக்காவில் வசிக்கும் திரு ரஞ்சிதன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் நான்கு குடும்பங்களுக்கு தலா பத்து ஊர்க் கோழிகள், கோழிக்கூடுகள், முட்டை அடை வைக்கும் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன்,
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மூவருக்கு தையல் இயந்திரங்களும்,
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பத்து மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகள் மற்றும்
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு தொடர் கல்விக்கான நிதி உதவியும்,
மேலும் ஒரு பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வாரம் ஒரு நாள் சத்துணவு திட்டத்திற்கான நிதி உதவி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது,
மேற்படி நிகழ்வில் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் திரு.கோகுலகுமார், ஓய்வு பெற்ற வலயக்கல்வி பணிப்பாளர் திரு.நந்தகுமார், தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திரு.வைகுந்தன், சங்க இணைப்பாளர் திரு.சத்தியேந்திரா, புனித நகர் தமிழ் வித்தியாலய அதிபர் திரு.குகன், ரூபவாகினி கூட்டுத்தாபன திரு.வன்னியகுலம், ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் திரு.யோகேந்திரநாதன், சமூக சேவகர் திரு.ஜெயராஜா, தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ரவிமயூரன் ஆகியோருடன் கிராம மக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலா இரண்டு தென்னம் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. Vegetable pack எல்லோருக்கும் வீடு வீடாக கொண்டுவந்து தரப்படும் என்றும் அன்றைய தினம் நடப்பட்ட தென்னம்பிள்ளைகளும் கண்காணிக்கப்படும் என்று சங்க இணைப்பாளரால் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மயூரன் செயலாளர் வடமராட்சி ஆன்மீக அறக்கட்டளை