AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
BATTICALOA-AMPARAI
AANMEEGA ARAKADDALAI
LATEST EVENT - May 28, 2022
தமிழ்:
வைகாசி 28 சனிக்கிழமை அன்று வாகரை கதிரவெளி பிரதேசத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட ஒரு குடும்பத்தின் சிறப்பு தேவையுடைய சிறு பிள்ளையின் தொடர்ச்சியான மருத்துவ செலவுக்காக ஆரம்ப கட்ட கொடுப்பனவாக 5000/ அப்பிரதேச கோயில் பூசாரியால் வழங்கி வைக்கப்பட்டது மேலும் மாதாந்த கொடுப்பனவாக 3000/- வங்கியில் வைப்பு செய்வதாகவும் கூறப்பட்டது. அத்துடன் மே 30 அன்று கொண்டு கிழிந்த சிறுபிள்ளைக்கு மருத்துவ செலவாக முதல்கட்டமாக 5000/= வாகரை உதவி பிரதேச செயலர் சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர் தலைமையில் முதற்கட்டமாக 5000/- வழங்கி வைக்கப்பட்ட தோடு மாதாந்தம் 3000/- வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும் வாகரை கட்டு முறிவு பிரதேசத்தில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வீட்டை முடித்துக் கொடுப்பதற்கு முதல் கட்டமாக பொருட்கள் மட்டு அம்பாறை ஆன்மீக அறக்கட்டளையால் இப்பெண்மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகள் முழுமையடைய எல்லாம் வல்ல மாமாங்கேஸ்வரர் அருள் வேண்டி நிற்கின்றோம் அத்துட ன் இந்நிகழ்வுகள் அனைத்தையும் மட்டு அம்பாறை அறக்கட்டளை தலைவர் ஜெயந்திர தீசன் உறுப்பினர் அழகு ராஜா அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டது மேலும் நிகழ்வுகளுக்கான நிதி ஐ வழங்கிய அமெரிக்காவில் வசிக்கும் Dr தேவகுமார் Dr ரன்ஜிதன் அவர்களுக்கு நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது செயலாளர் மட்டு அம்பாறை ஆன்மீக அறக்கட்டளை