top of page

KARAINAGAR THANNAI SITTI VINAYAGAR 

ARAKADDALAI

Karainagar 03-2023 1.jpeg
Karainagar 03-2023 2.jpeg
Karainagar 03-2023 3.jpeg
Karainagar 03-2023 5.jpeg
Karainagar 03-2023 4.jpeg
Karainagar 03-2023 6.jpeg
LATEST EVENT - March 10, 2023

தமிழ்இன்று காரைநகர் தன்னை சித்தி விநாயகர் ஆலய முன்றலில் தன்னை சித்தி விநாயகர் அறக்கட்டளை உறுப்பினர்களால் உதவி பிரதேச செயலகர் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட காரைநகர் பிரதேசத்தில் இருந்து 100 வலுவுற்ற பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளும் தென்னம்பிள்ளைகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஓய்வு நிலை யாழ் அரச அதிபர் திரு வேதநாயகம் வவுனியா பல்கலைக்கழக வேந்தர் திரு மோகனதாஸ் முறிகண்டி சிவயோக சுவாமிகள் அறக்கட்டளை காப்பாளர் திரு வைகுந்தன் மற்றும் கிராம சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது கோயில் பூசையுடனும் அர்ச்சகர் ஆசீர்வாதத்துடன் நடைபெற இருந்த போதிலும் கோயில் இருபூசை காரணமாக கோயில் பூட்டப்பட்டிருந்ததால் மாலை 4 மணிக்கு கோயில் திறக்கும் வேலையில் இக்கிராம பயனாளிகள் 20 பேருக்கு கோயிலில் பூசை செய்து பெயர் பதாதையுடன் புகைப்படம் எடுத்து எமக்கு அனுப்புவதாக திரு குகன் அவர்கள் உறுதியளித்த வகையில் நன்றியுரையுடன் இவ் நிகழ்வு முடிவுற்றது என்பது குறிப்பிடத்தக்கது..

Karainagar 08-2022 1.jpeg
Karainagar 08-2022 3.jpeg
Karainagar 08-2022 5.jpeg
Karainagar 08-2022 2.jpeg
Karainagar 08-2022 4.jpeg
Karainagar 08-2022 6.jpeg
August 5, 2022

தமிழ்இன்று 05/08/2022 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு காரைநகர் தன்னை சித்தி விநாயகர் அறக்கட்டளைஊடாக 50 வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா 2000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எமது ஊரைச்சேர்ந்த திருவாளர் கிரிதரன் (பொறியியலாளர்) அவர்களின் முழுமையான நிதி அனுசரனையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு வருகைதந்து சிறப்பித்த J/42, கிராம உத்தியோகத்தர் இராஜதுரை, ஓய்வு நிலை அதிபர் தில்லையம்பலம். மற்றும்  சமுர்த்தி உத்தியோகத்தர் கபிலன் அவர்களுக்கும். தன்னை சித்தி விநாயகர் அறக்கட்டளை யின் சார்பில் நன்றிகள்.மேலும் இன்றைய இக்கட்டான சூழ் நிலையில் ஆலயங்களின் ஆடம்பர திருவிழாக்களின் அனுக்கிரகங்களை விட இப்படியான உதவிகள் உண்மையில் ஏழையின் சிரிப்பில் கடவுளை காண்கின்ற தர்மச்செயல் எதிர் காலத்தில் எங்களையும் எங்கள் குடும்பங்களையும் நோய் நொடியில் இருந்து காக்கும் இப்படியான தர்மங்கள் என்றும் எங்களுடனே கூடவரும் அநாவசியமான செலவுகளை தவிர்த்து இப்படியான தர்ம செயல்களை செய்ய அனைவரும் தானாக முன் வரவேண்டும் என இன்றைய ஏழை மக்களின் எதிர் பார்ப்பாகவும் உள்ளது

bottom of page