AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
THADDUVANKOTTI KANNAKI AMMAN ARAKADDALAI
LATEST EVENT - March 9, 2023
தமிழ்: இன்று 9ம் திகதி பங்குனி 2023 கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள இலங்கையிலேயே உயரமான நடராஜர் சிலை நாளை அமையப்பெறும் இடமான தட்டுவன் கொட்டி கிராமத்தில் கண்ணகியம்மன் ஆன்மீக அறக்கட்டளை உருவாக்கமும் 78 பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முறிகண்டி சிவயோக சுவாமிகள் ஆன்மீக அறக்கட்டளை போசகர் தென்னை பயிர்செய்கை சபை பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன் பாடசாலை அதிபர் திரு ஜெகன் கொடிகாமம் பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வுக்கு மட்டுவில் பனையடி ஆன்மீக அறக்கட்டளை. முறிகண்டி சிவயோக சுவாமிகள் அறக்கட்டளை மீசாலை ஆன்மீக அறக்கட்டளை ஆகியன இணைந்து இந்நிகழ்வை நடாத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வின் நிதியாளர்கள் மட்டுவில் பனையடி பிள்ளையார் அறக்கட்டளை மீசாலை ஆன்மீக அறக்கட்டளை ஊடாக 60000 ரூபா பெறுமதியான அப்பியாச கொப்பிகளும் மற்றும் அவுஸ்ரேலியா மெல்போர்ன் இல் வசிக்கும் திரு ஈஸ்வரன் அவர்களால் முறிகண்டி சிவயோக சுவாமிகள் அறக்கட்டளை ஊடாக 60000 ரூபா பெறுமதியான அப்பியாச கொப்பிகளும் வழங்கியமைக்காக நிதியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இவ் அறக்கட்டளை உருவாக்கத்தின் பின் அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் ரஞ்சிதன் அவர்களால் usdollars 500 இக்கிராம மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளுக்காக வைப்புச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.