AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
MANNAR SARVAMATHA AANMEEGA ARAKADDALAI
LATEST EVENT - April 21, 2024
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள பள்ளங்கோட்டை கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள புதுக்காடு கிராமத்திற்கு யாழ்ப்பாணம் இந்து ஆன்மீக அறக்கட்டளை நிதியம் மற்றும் மன்னார் சர்வமத ஆன்மீக அறக்கட்டளை இணைந்து ஏழு இலட்சம் ரூபா பெறுமதியில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் விநியோகம் (RO water purification system) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21.04.2024)நடைபெற்ரது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல் இளங்கோவன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜி. விக்ரர் சமூர்த்தி உத்தியோகத்தர் அன்பழகன் அப்பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் இரு கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்கள் பயன்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கிராமங்களில் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனையாக சிறுநீரக நோய்க்கு ஒரு காரணியான சுத்தமான குடிநீர் இன்மை என்ற சமூகப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு RO water purification system அமைத்ததன் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது என்று மக்கள் தெரிவித்துள்ளார்கள்
August 10, 2022
தமிழ்:
சுபகிருது வருடம், ஆடி மாதம், 25ம் நாள், பட்டினத்தடிகள் குருபூசை தினமாகவும் மண்டலாபிஷேக தினமான இன்று,
மன்னார்-நானாட்டான் கறுக்காய் முறிப்பில் வசிக்கும் செல்வி-தர்ஷினி (வயது-22) அவர்களது சிறுநீரக நோய் குணமாக மன்னார்- கௌரி அம்பாள் சமேத திருக்கேதீஸ்வர நாதர் திருவருளை வேண்டி செய்யப்பட்ட பிரார்தனைகளை தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் வைத்து, அப்பிரதேச கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட, (தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தெரிவுசெய்யப்பட்ட) 125 குடும்பங்களுக்கு 2050 ரூபா பெறுமதியான உலர்உணவு விநியோகம் செய்யப்பட்டது.
மேற்படி நிகழ்வானது,
பல்கலைக்கழக வேந்தரும், ஓய்வுநிலை பேராசிரியருமான திரு.சு.மோகனதாஸ், தலைமையிலும்
தென்னை பயிர்ச்செய்கை சபை பிராந்திய முகாமையாளர் திரு.தே.வைகுந்தன்
சமூக அமைப்பின் பணிப்பாளர் திரு.ஜே.சத்தியேந்திரா
திருக்கேதீஸ்வரர் ஆலய பிரதமகுரு கருணானந்த குருக்கள்
ஆலய அறங்காவலர் தொண்டர் சபை தலைவர் திரு.ரூபன்
திரு.பா.மயூரன்
ஆகியோரது பங்களிப்பிலும்
ஆலய நிர்வாக சபை உறுப்பினரும் மன்னார்- சர்வமத ஆன்மீக அறக்கட்டளை நிதியத்தின் செயலாளருமான திரு.கஜன் அவர்களது நெறிப்படுத்துகையில் செல்வி தர்சினி அவரின் அம்மா முன்னிலையில் நடைபெற்றது. அத்துடன் திரு ரவீந்திரன் செல்வராஜா அவர்களின் ஒரு பகுதி நிதியான 50000 /- ரூபா செல்வி தர்சினி அவரின் அம்மாவின் தொடர்ச்சியான மருத்துவ செலவுக்காக திரு. மோகனதாஸ் பிரதம குருக்களால் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் நிதியாளர்களான லண்டனில் வசிக்கும் திரு ரவீந்திரன். செல்வராஜா அவர்கட்கும் உலர் உணவு பொதிகளுக்கும் இணைந்த செலவுகளுக்கும் (285.000/-) ஆன முழுமையான நிதிப்பங்காளர் ஆனToronto இல் வசிக்கும் திரு கோபால் கந்தையா அவர்களுக்கும் இந்நிகழ்வின் பிரதான வழிகாட்டியான அமெரிக்காவில் வசிக்கும் திரு சின்னையா அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து எதிர் வரும் வெள்ளிக்கிழமை செல்வி தர்சினி அவர்களது நோய் குணமாக வேண்டி மன்னார்- சர்வமத ஆன்மீக அறக்கட்டளை நிதிய உறுப்பினர்கள் மற்றும் தொண்டர் சபையினர் இணைந்து பாலாவி தீர்த்தக்கரையிலிருந்து பாற்குட காவடி எடுத்து திருக்கேதீஸ்வர நாதர் மகாலிங்கத்திற்கு அபிஸேக விசேட ஆராதனை நடைபெற உள்ளது என்பதை ஆலய பிரதம குரு அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
September 11, 2021
தமிழ்:
மன்னார்- திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜையை தொடர்ந்து மன்னார்- சர்வ மத ஆன்மீக அறக்கட்டளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் ஆலய முன்றலில் வைத்து கொரோனா அனர்த்தத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு ரூபா 1500/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில் அப்பிரதேசத்தின் கிராம சேவையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டனர்.