top of page

VATRAPALAI

AANMEEGA ARAKADDALAI

Vatrapalai 12-2022 1.jpeg
Vatrapalai 12-2022 2.jpeg
Vatrapalai 12-2022 3.jpeg
Vatrapalai 12-2022 4.jpeg
LATEST EVENT - December 19, 2022

தமிழ்

இன்று 19/12/22 திங்கட்கிழமை முல்லைத்தீவு வற்றாப்பளை ஆன்மீக அறக்கட்டளை உறுப்பினர்களால் குருந்தூர் மலைகிராமத்திற்கு அண்மையில் உள்ள குமுழமுனை கிராமத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு 3000/ ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அறக்கட்டளை பொருளாளர் திரு சிறிரங்கன் போசகரும் தென்னை பயிர் செய்கை சபை பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன் அறக்கட்டளையின் செயலாளர் திரு சுபாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் திரு சுபாஸ்கரன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது. இந்திகழ்வானது பல தடவைகள் இனமுறுகல் சூழல் நிலைகளில் பிற்போடப்பட்டு இன்று இறைவன் அருளால் இனிதே நடந்தேறியுள்ளது என்பதோடு இந்நிகழ்வின் நிதியாளர்களான யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களான திரு லோகநாதன் திரு அரவிந்தன் திரு ஈஸ்வரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

Vatrapalai 09-2022 1.jpeg
Vatrapalai 09-2022 3.jpeg
Vatrapalai 09-2022 2.jpeg
Vatrapalai 09-2022 4.jpeg
September 8, 2022

தமிழ்

வியாழக்கிழமை 08.09.22 திகதி இன்று முல்லைத்தீவு வற்றாப்பளை ஆன்மீக அறக்கட்டளை தலைவரும் வற்றாப்பளை அம்மன் பரிபாலண சபையின் முன்னாள் அறங்காவலருமான ஓய்வு பெற்ற பாடசாலை அதிபருமான திரு குகதாசன் ஐயா அவர்களின் தலைமையிலும் பரிபாலண சபை இந்நாள் தலைவர் திரு அரசரட்ணம்  செயலாளர் விக்கினேஸ்வரன் தலைமையிலும் இந்நிகழ்வானது நடைபெற்றது.                                                                                                                                                                                                                                           "கற்க கசடறக் கற்ற பின் நிற்க அதற்குத் தக" என்ற யாழ் இந்துக் கல்லூரியின் தாரக மந்திரத்திற்கு ஏற்ப 1983 GCE A/L பழைய | மாணவர்களான  Toronto இல் வசிக்கும் திரு அரவிந்தன் அவர்களினதும்  மற்றும் அவுஸ்ரேலியா மெல்போர்ன் இல் வசிக்கும் திரு ஈஸ்வரன் அவர்களினதும் USA மரிலாண்ட் இல் வசிக்கும் திரு லோகநாதன் அவர்களினதும் நிதிப்பங்களிப்பில் முல்லைத்தீவு ஆனந்தபுரம் . வற்றாப்பளை கிராமத்தில் வசிக்கும்  80 வறுமைக்குப்பட்ட குடும்பங்களுக்கு 2000/= ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும்   பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு வாழ்வாதார செயற்பாட்டு உதவியாக வீட்டுத்தோட்டவேலைக்காக நீர் பம்பி ஒன்றும் 2 தென்னம் பிள்ளைகள் வீதம் 200 தென்னம்பிள்ளைகளும் முல்லைத்தீவு வற்றாப்பளை ஆன்மீக  அறக்கட்டளை உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இந்நிகழ்வில் எமது அறக்கட்டளையால் உதவி பெற்றவரான  வட்டக்கச்சி சம்பவத்தில் கணவனை இழந்த சுதந்திரபுரத்தில் வசிக்கும் தீபா அவர்களும் பங்கு பற்றி பொதிகளை வழங்கி வைத்தார் என்பதும குறிப்பிடத்தக்கது. மேலும் குமுழமுனை தற்கால சர்ச்சைக்குரிய கோயிலான குருந்தூர் மலை ஐ சார்ந்த பகுதியில் வசிக்கும் மிகவும் வறுமைக்குட்பட்ட மக்களுக்கு அறக்கட்டளையின் பேரால் 2 ம் கட்ட நிகழ்வாக 20 உலர் பொதிகளும் 2 வாழ்வாதார செயற்பாடுகளும் தென்னம் பிள்ளைகள் வழங்கும்   நிகழ்வும் செய்வதற்கு அறக்கட்டளை அமைப்பினர் தீர்மானித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

bottom of page