AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
TRINCOMALEE PATHIRAKAALI AMMAN
ARAKADDALAI
LATEST EVENT - February 12, 2023
தமிழ்: இன்று காரைநகர் தன்னை சித்தி விநாயகர் ஆலய முன்றலில் தன்னை சித்தி விநாயகர் அறக்கட்டளை உறுப்பினர்களால் உதவி பிரதேச செயலகர் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட காரைநகர் பிரதேசத்தில் இருந்து 100 வலுவுற்ற பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளும் தென்னம்பிள்ளைகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஓய்வு நிலை யாழ் அரச அதிபர் திரு வேதநாயகம் வவுனியா பல்கலைக்கழக வேந்தர் திரு மோகனதாஸ் முறிகண்டி சிவயோக சுவாமிகள் அறக்கட்டளை காப்பாளர் திரு வைகுந்தன் மற்றும் கிராம சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது கோயில் பூசையுடனும் அர்ச்சகர் ஆசீர்வாதத்துடன் நடைபெற இருந்த போதிலும் கோயில் இருபூசை காரணமாக கோயில் பூட்டப்பட்டிருந்ததால் மாலை 4 மணிக்கு கோயில் திறக்கும் வேலையில் இக்கிராம பயனாளிகள் 20 பேருக்கு கோயிலில் பூசை செய்து பெயர் பதாதையுடன் புகைப்படம் எடுத்து எமக்கு அனுப்புவதாக திரு குகன் அவர்கள் உறுதியளித்த வகையில் நன்றியுரையுடன் இவ் நிகழ்வு முடிவுற்றது என்பது குறிப்பிடத்தக்கது..