AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
VASAVILAN CENTRAL COLLEGE
ARAKADDALAI
LATEST EVENT - March 7, 2023
தமிழ்: இன்றைய தினம் வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் அறக்கட்டளையின் 3 ம் ஆண்டு நிறைவு ஆரம்பநிகழ்வு,ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பிறந்த நினைவு நாளில்
யுத்தத்தால் மோசமான பாதிக்கப்பட்டு மீள் குடியேறிய பொருளாதாரத்தில் நலிவுற்ற வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் குடும்பங்களை சேர்ந்த ஆரம்பபாடசாலைகளில் கல்வி பயிலும்( தரம்4,5) 80 மாணவர்களிற்கு (1075×80=86,000/=) பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.இதில் கனடாவிலிருந்து வருகை தந்துள்ள "ஓராயம்"மர வளர்ப்பு அமைப்பின் நிறுவனர் திரு.குருபரனும் கலந்து சிறப்பித்தார்.இதற்குதவிய அனைவருக்கும் நன்றிகளும்,மானம்பராய் பிள்ளையாரின் அருளாசி கிடைப்பதாக.
இவ்வாறான உதவிகள் வழங்க அனைவரும் நிதிப்பங்களிப்பு வழங்கி நலிவுற்ற சமுதாயத்தை உயர்வடைய செய்வோம். "மக்கள் சேவை மகேசன் சேவை".
October 10, 2022
தமிழ்: இன்று 10/10/22 திங்கள் கிழமை உடல் உள வாரம் நினைவுகூறும் இறுதி நாளில் வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் அறக்கட்டளை நிதியத்தின் தொடர்ச்சியான பணியில் வயாவிளான் மத்திய கல்லூரியின் பொதுமண்டபத்தில் கல்லூரி அதிபர் தலைமையில் அப்பிரதேச மதப் பெரியார்களின் ஆசியுடன் அறக்கட்டளையின் செயலாளர் பொறியியலாளர் திரு வதனகுமார் பொருளாளர் திரு தேவகுமார் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன். சக்தி அமைப்பின் பிரதிநிதி திரு ரவி மயூரன் கிராம உத்தியோகத்தர். போதை ஒழிப்பு பிரிவின் பிரதேச செயலக உத்தியோகத்தர் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ருசிபா ஜனனி ஆகியோரின் பங்களிப்பில் "போதைப் பொருள் பாவனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மனம் திறந்து பேசுவோம் "என்ற கருப்பொருளில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கருத்துரைகள் வழங்கப்பட்டன. அத்துடன் 400 தென்னம் பிள்ளைகளும் 400 விதைப் பக்கட்டுகளும் வழங்கப்பட்டதோடு தென்னை வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்துகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் நிதியாளரான அமெரிக்கா மேரிலாண்ட் இல் வசிக்கும் திரு லோகநாதன் வரதராசா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.