top of page

COLUMBUTHURAI SIVAYOGA SWAMI

ARAKADDALAI

Columbuthurai 02-2023 1.jpeg
Columbuthurai 02-2023 2.jpeg
Columbuthurai 02-2023 3.jpeg
Columbuthurai 02-2023 4.jpeg
LATEST EVENT - February 8, 2023

தமிழ்: இன்று (8-2-2023) கொழும்புத்துறை சிவயோகர் சுவாமிகள் ஆன்மீக அறக்கட்டளை, வடமராட்சி ஆன்மீக அறக்கட்டளை நிதியத்துடன் இணைந்து J/135, J136 கல்லுண்டாய் வாழ் மக்களுக்கு முறிகண்டி சிவயோக சுவாமி ஆன்மீக அறக்கட்டளை போசகர் திரு திரு.தேவராஜா வைகுந்தன், ஓய்வு நிலை கலைத்துறை பேராசிரியர் திருமதி நாச்சியார் செல்வநாயகம், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் திரு.இளங்கோவன், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் நடராஜா சர்வேஸ்வரன் , வவுனியா பல்கலைக்கழக இந்நாள் வேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் Dr.பவந்தன் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் 65 குடும்பங்களுக்கு 3075/=பெறுமதியான உலர் உணவுப் பொதி, தென்னம்பிள்ளை, மற்றும் Solar Panel போன்றன வழங்கி, வைக்கப்பட்டது. மேலும் மருத்துவ உதவியாக 100000 .ரூபா Dr பவந்தனிடம் வழங்கி வைக்கப்பட்டது. கிராம மக்களினால் கிராமத்தில் ஏற்படும் பிரச்சனைகளான வீதி, சிறுவர்களுக்கான கல்வி போக்குவரத்து வெள்ளம் காற்று என்பவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடப்பட்டு கோரிக்கை மனு ஒன்றும் -. இன்று நிகழ்ந்த நிகழ்வுக்கான நிதியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மெழுகுதிரி தொழிலகத்தின் நிதியாளர்களான ஹாட்லிக் கல்லுரி 1989 G.C.E A/L இல் கல்வி கற்று 52 வயதில் சிறுநீரக பிரச்சனையால் மறைந்த திரு சிவதாசன் அவர்களின் வகுப்பு சக மாணவர்களின்  அன்பளிப்பினால் கடந்த மாதங்களில் நடைபெற்ற மெழுகுதிரிப் பயிற்சியும் அதனை தொடர்ந்து இன்று வழங்கப்பட்ட உபகரணத் தொகுதியும் ஆகும் என்பதோடு பண்ணாகத்தைச் சேர்ந்த மறைந்த திரு செல்லையா சபாநாயகர் அவர்களை நினைவு கூறுமுகமாக ரொரோண்டோவில் வசிக்கும் அவரது குடும்ப உறவுகளும் நண்பர்களாலும் 4 சூரிய கல மின்கலத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் லண்டனில் வசிக்கும் திரு ரவீந்திரன் செல்வராஜா அவர்களின்  அன்பான அம்மாவின் நினைவாக உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு முன்னாள் யாழ் அரச  அதிபர் மறைந்த திரு மரணிக்கவாசகர் அவர்களின் நினைவாகவும் அத்துடன் தொல்புரத்தைச் சார்ந்த மறைந்த திரு புவனேந்திரன் அவர்களின் நினைவாக அவர்களின் மகன்களான அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு முரளிதரன் மற்றும் திரு தயாபரன் . வறிய சிறுவர் நோயாளிகளின் மருந்துச் செலவுக்காக 100000 ரூபாய் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான தன்னிறைவு பொருளாதார சுய உற்பத்தி சிறு தொழிலகங்களே எமது தாயக உறவுகளுக்கு இக்காலகட்டத்தில் அவசியமானவை எனவே புலம் பெயர் உறவுகளே இவை பற்றி கருத்தில் எடுத்து உங்கள் உதவிகள் தாயகத்தில் ஒரு முதலீடாக மாற வேண்டும் என்று சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகும் என்பது  எமது அறக்கட்டளைகளின் 'நோக்கமாகும்

Columbuthurai 04-2022 1.jpeg
Columbuthurai 04-2022 3.jpeg
Columbuthurai 04-2022 2.jpeg
Columbuthurai 04-2022 4.jpeg
Columbuthurai 04-2022 5.jpeg
Columbuthurai 04-2022 6.jpeg
April 29, 2022

தமிழ்: இன்று 29|04/22 வெள்ளிக்கிழமை கொழும்புத்துறை சிவயோகசுவாமிகள் அறக்கட்டளை ஊடாக துரையப்பா மாதர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் 4.00 மணியளவில்   தென்னைப் பயிர் செய்கை சபை பிராந்திய முகாமையாளர் வைகுந்தன் தலைமையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் திரு சுதர்சன். இவ் அறக்கட்டளையின் பேரசகரும் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் திரு வேதநாயகம் மேற்பார்வையிலும் முன்னாள் உபவேந்தரும் பேராசிரியருமான இந் நாள் வவுனியா பல்கலைக்கழக வேந்தருமான திரு மோகனதாஸ் அவர்களின் பங்களிப்புடன் 3 பெண் தலைமை குடும்பங்களுக்கு 3  ஆடுகளும் ஒவ்வொருவருக்கும் பராமரிப்பு செலவாக 5000/- பணமும். 2 நலிவுற்ற குடும்பங்களுக்கு கோழிகளும் கூடுகளும் தீவனமும் 5000/- பணமும். அனைவருக்கும் 2 தென்னம் பிள்ளைகளும் அமெரிக்காவில் வசிக்கும் Dr. சபா குல துங்கம் அவர்களும் | கனடாவில் வசிக்கும் சட்டத்தரணி திரு நாதன் சிறிதரன்  அவர்களுடைய நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப் பட்டன. இவ் உதவிகள் ஆனது காலத்தின் தேவையறிந்து தற்சார்பு பொருளாதாரத்தை இக் குடும்பங்களுக்கு வலுப்படுத்தும் என்பது உறுதி.

bottom of page