AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
SITHTHANKERNY
AANMEEGA ARAKADDALAI
LATEST EVENT - March 2, 2023
Video: https://fb.watch/j31o_27f81/
தமிழ்:
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கான
அவசர மருத்துவ உதவி வழங்கல் நிகழ்வு.
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அவசர மருத்துவ உதவிகள் மற்றும் தேவைகளுக்கு கனடா சித்தன் கேணி ஒன்றியத்தின் மக்களினால் திரட்டப்பட்ட ஆறுலட்சத்து ஆயிரம் (601,000.00) ரூபா உதவியை கையளிக்கும் நிகழ்வு 03.03.2023 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சித்தன்கேணி ஆன்மீக அறக்கட்டளை தலைவர் சி. ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகத்தினரினால் டாக்டர் திருமதி R. காந்தநேசன் அவர்களின் தலைமையிலான வைத்திய சங்கத்திடம் கையளிக்கப்பட்ட நிகழ்வின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் இந்த நிதிச் சேகரிப்பில் பங்குகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
February 18, 2023
English:
Today, 18 February 2023, an auspicious Sivaraathri day, the trustees of the Siththankerny Aathmeega Arakattalai handed over essential drugs worth Rs 1 Lakh to Dr. Rathini of Vaddukoddai hospital to help our patients in response to her plea for help recently. I have shared a few photos and a letter thanking Dr. Saba Kulathungam in USA for his generous donation with which we intend to help a few more regional/base hospitals in the coming weeks. It is my sincere hope and prayers that our fortunate friends will do similar things to help our less fortunate people survive their trying times by helping them through our places of worshiping, schools and hospitals etc in their hometowns by involving respected people there and abroad. Thank you all for your sincere support in our collective efforts to help our less fortunate people in the name of God and as a tribute to our parents, loved ones, Gurus and others who helped us become who we are today. May God bless everyone. Kind Regards, Gnana Chinniah
May 18, 2022
தமிழ்:
இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு சித்தன்கேணி ஆன்மீக அறக்கட்டளையில் 34 பேருக்கு 5000 ரூபா வீதம் உலர் உணவு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு சித்தன்கேணி சேர்ந்தவர்களும் பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் திருச்செல்வம் ராமேஸ்வரன் கமலநாதன் குமரன் ஆகியோரின் நிதி உதவியில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு அவுஸ்ரேலியா நாட்டிலிருந்து வருகை தந்த செல்லத்துரை பகிரதன் குடும்பத்தினரும் கலந்து சிறப்பித்தார்கள் அவர்களும் சில பெண்களுக்கு ஆடைகளை அன்பளிப்புச் செய்தார்கள் அவர்கள் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு அன்பளிப்பு வழங்கவுள்ளனர் இன்னும் சில தினங்களில் நோயாளருக்கு கான மருந்துப் பொருள் வாங்குவதற்கு உதவிகள் வழங்கப்படும் என் உதவி வழங்கிய ராமேஸ்வரன் குமரன் ஆகியோருக்கு ஆன்மீக அறக்கட்டளை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் இதில் சிறப்பு விருந்தினராக வந்து கவுரவித்த செல்லத்துரை பகீரதன் தம்பதிகளுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு முன் வந்தமைக்கு எங்களது நன்றிகள் அவர்கள் இன்று சித்தங்கேணி கணேச வித்தியாசாலையில் தரம் 5 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி சிறப்பித்தார்கள்