AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
MURIKANDI SIVAYOGA SWAMI
ARAKADDALAI
LATEST EVENT - December 8, 2022
தமிழ்:
வட்டக்கச்சி மத்திய மகாவித்தியாலய அதிபர் வேண்டுகோளின் பிரகாரம் இன்று 8/12/22 வியாழக்கிழமை முறிகண்டி சிவயோக சுவாமிகள் ஆன்மீக அறக்கட்டளையினால் மத்திய மகாவித்தியாலயத்தின் பொது மண்டபத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் கிளிநொச்சி சின்மயா மிஷன் சுவாமிஜி அவர்களின் ஆசியுடனும் பிரதேச வைத்திய நிபுணர் ரஞ்சன். கல்வித்திணைக்கள அதிகாரிகள் மற்றும் தென்னைப் பயிர்செய்கை சபை பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன். முறிகண்டி சிவயோகசுவாமி ஆன்மீக அறக்கட்டளை தலைவர் திரு சௌந்திரநாயகம் அவர்களின் பங்களிப்புடன் போதைப் பொருளை ஓழிப்போம் என்ற கருப்பொருளில் கருத்துரைகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டதோடு தற்சார்பு பொருளாதாரத்தை வளப்படுத்த 400 தென்னம் பிள்ளைகளும் 200 விதைப் பக்கட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இந்நிகழ்விற்கு நிதி வழங்குனரான வைத்தியர் ரஞ்சிதன் அவர்களுக்கு பாடசாலை அதிபரால் நன்றி தெரிவிக்கப்பட்டது
April 11, 2022
தமிழ்:
திரு ரவிந்திரன் செல்வராஜா அவர்களின் தாயாரின் ஞாபகார்த்தமாக அவர்களின் நிதிப்பங்களிப்பில் இன்று 11.04.22 ஆயிலிய திங்கள் . சிவயோக சுவாமிகளின் விசேட தினத்தில் அத்துடன் முறிகண்டி சிவயோக சுவாமிகள் அறக்கட்டளை உருவாகி ஒரு வருட பூர்த்தி நிகழ்வையொட்டி வட்டக்கச்சி இராமநாதபுரம் கிராமத்தில் 3 பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு 10 எண்ணிக்கையான வளர்ந்த ஊர்க் கோழிகளும் ஒரு கோழிக்குஞ்சு பொரிக்கும் இயந்திரமும் கட்டப்பட்ட நிலக்கூடும் முறிகண்டி சிவயோக சுவாமிகள் அறக்கட்டளை பொருளாளர் திரு மயூரன் அவர்களாலும் உறுப்பினர் திரு சிறிரங்கன் அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது இக்காலகட்டத்தின் தேவையான சுயதொழிலை இவ் வலுவுற்றோரின் வாழ்வாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் என்பது உறுதியாகும் இந்நிதி ஐ வழங்கியவர்களுக்கும் நன்றி கூறப்பட்டது செயலளார் முறிகண்டி சிவயோகசுவாமிகள் அறக்கட்டளை
December 20, 2021
தமிழ்:
20/12/21 திங்கள் கிழமை வட்டக்கச்சி கிராமத்தில் மகனை இழந்த 4 பெண் பிள்ளைகளை கொண்ட வயதான பெண் தலைமைத்துவ அம்மாவிற்கு கலாநிதி சிவகுமார் அவர் துணைவியார் இன்பா சிவா அவர்களின் நிதிப்பங்களிப்பில் அக்குடும்பத்தின் வாழ்வாதார உதவியாக 30 நாட்டுக் கோழிகளையும் முட்டைகளை பெறுவதற்காகவும் அவ் முட்டைகளை அடை வைத்து கோழிக்குஞ்சுகளை எடுத்து விற்று வருமானம் எடுப்பதற்காக அடைகாக்கும் கருவி Incubator ஒன்றும் அதற்கான பயிற்சியும் கோழிக்கூடு அமைப்பதற்கான செலவுத் தொகையின் பாதியினையும் மிகுதி பயனாளி பங்களிப்பு அடிப்படையிலும் முறிகண்டி சிவயோக சுவாமிகள் அறக்கட்டளை செயலாளர் திரு வைகுந்தன் பொருளாளர் திரு மயூரன் இப்பிரதேச சமூக ஆர்வலரும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும் விளையாடுக் கழக ஒன்றியத்தின் தலைவர் திரு சிறிரங்கன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. செயலாளர் முறிகண்டி சிவயோக சுவாமிகள் அறக்கட்டளை