AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
CHUNNAKAM SKANDAVARODAYA
AANMEEGA ARAKADDALAI
LATEST EVENT - October 6, 2022
தமிழ்: இன்று 6/10/22 வியாழக்கிழமை கேதார கெளரி விரத 2ம் நாளில், ஆசிரியர் தின நாளில் ஸ்கந்தவரோதயம் கல்லூரியில் தியான மண்டபத்தில் ஸ்கந்தவரோதய ஆன்மீக அறக்கட்டளையால் கல்லூரி அதிபர் தலைமையில் தென்னைப் பயிர்ச்செய்கை சபை பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் வழக்கம்பரை முத்துமாரியம்மன் அறக்கொடை நிதியத்தின் பிரதானி நாச்சியாரம்மா, பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு பிரிவு பிரதானிகளும், உபஅதிபர் ஆசிரியர் பிரதேச சக்தி அமைப்பின் பிரதானி சிவநாயகம் பங்களிப்புடன் "போதை ஆக்கிரமிப்பை துரத்துவோம். கெத்தான இளைஞர் சமூகத்தை உருவாக்குவோம்" என்ற தொனிப்பொருளில் போதைவஸ்து ஒழிப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வுகள் காணொளிகள் விளக்கவுரைகள் வழங்கப்பட்டதோடு 400 தென்னம் பிள்ளைகளும் 400 விதைப் பக்கட்டுகளும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. மேலும் கல்லூரி அதிபரால் இவ் நிகழ்வுக்கு நிதியாளரான இப் பாடசாலையின் ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியர் அமரர் திரு ஞானச்சந்திரமூர்த்தி பற்றி நினைவுகூர்ந்ததோடு அவருடைய குடும்பத்தினருக்கும் நன்றி கூறி இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
March 29, 2022
தமிழ்: இன்று 29/03/22 ஸ்கந்தவரோதய ஆன்மீக அறக்கட்டளையால் நலிவுற்ற இருவருக்கு வாழ்வாதார உதவியாக இரண்டு தையல் இயந்திரங்களும் இரண்டு சிறு பிள்ளைகளின் கல்வி உதவியும் திரு வைகுந்தன் பிராந்திய முகாமையாளர் தென்னைப் பயிர்செய்கை சபை அவர்களின் தலைமையில் திரு மயூரன் பொருளாளர் முறிகண்டி சிவயோக சுவாமி அறக்கட்டளை அவர்களின் பங்களிப்பிலும் திருமதி சத்யா வைத்தியர் சமூக சேவையாளர் அவர்களாலும் ஸ்கந்தவரோதயம் ஆன்மீக அறக்கட்டளை உறுப்பினர்களாலும் சங்குவேலி பிள்ளையார் கோவில் பிரதம பூசகர் அவர்களின் ஆசியுடன் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் நிதியாளர்களுக்கும் நன்றி கூறப்பட்டது, ஸ்கந்தவரோதய ஆன்மீக அறக்கட்டளை