top of page

VALAKKAMPARAI AMMAN

ARAKADDALAI

Valakkamparai 07-2022 1.jpeg
Valakkamparai 07-2022 2.jpeg
Valakkamparai 07-2022 3.jpeg
Valakkamparai 07-2022 4.jpeg
LATEST EVENT - July 7, 2022

தமிழ்: இன்று 07/07/2022 வடக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை அனுசரணையுடன் அண்மையில் அமரத்துவம் அடைந்த அமரர் சோமசுந்தரம் திருச்செல்வம் அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி கிராம சேவகர்களினால் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்கு உற்பட்ட 150 குடும்பங்களுக்கு தலா 2000/= பெறுமதியான உலர் உணவு பொருட்களும் 500/= பெறுமதியான கருத்தக்கொழும்பான் மாங்கனறுக்களும், கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற பயன் தரக்கூடிய கன்றுக்களும் வழங்கப்பட்டன. வடக்கம்பரை அம்பாளின் வருடந்த உற்சவத்தின் 5ம் நாள் திருவிழா அன்று மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இப் புனித கைங்கரியம் நிறைவேற்றப்பட்டது. தற்காலத்தில் நமது நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை உணவுப்பொருட்களின் விலையேற்றம் என்பவற்றல் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு ஆண்டவன் பெயரிலும் அன்புக்குரியவர்களின் ஆத்மசாந்திக்காகவும் இவ்வாறான தர்ம காரியங்கள் ஏனையவர்களுக்கும் பின்பற்றி எமது ஏழை மக்களின் உயிர்காக்க வரவேண்டும். இன்றைய தினம் இடம் பெற்ற நற்காரியங்களுக்கு பண உதவி வழங்கிய திரு. ஆசைமுத்து சுதாகரன்( ஜெர்மனி), கிரிஷாந்தன்(கனடா), திரு. விஸ்வலிங்கம் ஸ்ரீதரன்(ஜெர்மனி),Dr. ரஞ்சிதன்(அமெரிக்கா மாங்கன்றுக்கள்  விநியோக உதவி) என்பவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். மேலும் வடக்கம்பரை அறக்கட்டளை சார்பாக கலந்து கொண்ட திரு. துரைலிங்கம், திருமதி. நாச்சியர் செல்வநாயகம், திரு. ஸ்ரீகாந்தன் மற்றும் என்பவற்றை திறன்பட நடாத்த உதவிய காரைநகர் தன்னை சித்தி விநாயகர் ஆலய அறக்கட்டளையின் தலைவர் திரு. ச. குகராஜா அனைவருக்கும் எங்கள் நன்றிகள்

Valakkamparai 04-2022 1.jpeg
Valakkamparai 04-2022 3.jpeg
Valakkamparai 04-2022 2.jpeg
Valakkamparai 04-2022 4.jpeg
Valakkamparai 04-2022 5.jpeg
Valakkamparai 04-2022 7.jpeg
Valakkamparai 04-2022 6.jpeg
Valakkamparai 04-2022 8.jpeg
April 14, 2022

English: On April 14, 2022, Tamil New year day, 5 needy families were helped with their livelihood with chicken cage with 10 grown chicken and 1 month supply of chicken food and Rs 5,000 cash and another 5 needy families with goats and Rs 5,000 cash spending a total of Rs 500,000 from Mr. Mohan Sivanandan in USA, Mr. Theivakumaran in USA, and Dr. Saba Kulathungam in USA and Valakkamparai Amman Arakattalai. Prof Naachiyar Selvanayagam, trustee of the Valakkamparai Amman Arakattalai and former head of the Hindu Culture Department of Jaffna University, Velan Swamigal and several others attended this event.

Valakkamparai 11-2021 1.jpeg
Valakkamparai 11-2021 3.jpeg
Valakkamparai 11-2021 2.jpeg
Valakkamparai 11-2021 4.jpeg
November 7, 2021

தமிழ்: 

07.11.2021 ஞாயிற்றுக் கிழமை தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியத்தின் ஊடாக எமது போசகரும் பொறியியலாளருமாகிய ஞான சின்னையாவின் மகன் செல்வன் குகன் சின்னையாவின் நிதிப் பங்களிப்புடன் பொன்னாலை கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளை அக் கிராம சேவையாளரின் ஊடாக அடையாளப்படுத்தி 8 நபர்களுக்கும் தலா 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அவர்களின் வீடு வீடாக சென்று, மழை வெள்ளங்களையும் கடந்து இப் பொருட்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் வழங்கப்பட்டது. அவர்களின் வாழ்க்கை முறையை அவதானித்த பொழுது கண்கள் குளமாகின. ஆண்டவன் படைப்பில் இப்படியான வேறுபாடுகள் எதற்கு என்று எண்ணத் தோன்றுகின்றது. உருகாதார் மனமும் உருக வைக்கின்றது. இப்படத்தின் மூலம் யாவரும் புரிந்து கொள்ளலாம். இதில் அவர்களின் கோரிக்கையை உதவி செய்ய விரும்பின் மேற்படி எம்முடன் தொடர்பு கொண்டால் நிறைவேற்றித் தரப்படும். 

-செயலாளர் வழக்கம்பரை அறக்கட்டளை நிதியம்

bottom of page