top of page

ARALI SRI AMMAN

ARAKADDALAI

Arali 10-2022 1.jpeg
Arali 10-2022 2.jpeg
Arali 10-2022 3.jpeg
Arali 10-2022 4.jpeg
LATEST EVENT - October 2, 2022

தமிழ்: இன்று 2ம் திகதி ஓக்ரோபர் மாதம் 22 நவராத்திரி நன்னாளில் அராலி அம்பாள் ஆன்மீக அறக்கட்டளை மூலம்  400 தென்னங்கன்றுகள் அராலி மக்களுக்கு இரண்டு வீதம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் அம்பாள் அறக்கொடை நிதியத்தின் நிதி அனுசரனையில் வழங்கப்பட்டன.அத்துடன்   கணவனால் கைவிடப்பட்ட ஒரு பிள்ளைக்கு தாயான இளம் பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக 16,000 பெறுமதியான 3 மாத ஊர் கோழிகள் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையினால் வழங்கப்பட்டது. மேலும் யாழ் மாவட்டத்தில் தற்போது பேசுபொருளாக உள்ள போதைப் பொருள்  தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. " மக்கள் சேவை மகேசன் சேவை" விவேகானந்தர் நன்றி

Arali 08-2022 1.jpeg
Arali 08-2022 3.jpeg
Arali 08-2022 2.jpeg
Arali 08-2022 4.jpeg
August 24, 2022

தமிழ்: இன்றைய தினம் ஆவணி 24ம் திகதி, அராலி அம்மன் தேவஸ்தானத்தில் முற்றலில் ஆன்மீக அறக்கட்டளைகள் ஒன்றிணைந்து 100 பயனாளிகளுக்கு உலர் உணவும் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ஒரு ஆடும் இரண்டு குட்டிகளும் வழங்கப்பட்டன. அராலி அம்மன் ஆலயத்தில் புதிதாக ஆன்மீக அறக்கட்டளை ஒன்றும் அம்பாள் அருளால் அமைக்கப்பட்டது. இதில் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை, சங்கரத்தை அம்பாள் அறக்கட்டளையும் காரைநகர் கோவில் அறங்காவலர் கலந்து சிறப்பித்தனர். இதில் அராலி  அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த அறங்காவலர் சிவகாந்தன், சின்னம்மா வித்யாலயா அதிபர் சிவலோகநாதன் தேசிகர், வழக்கம்பரை  முத்துமாரி அம்பாள் அறக்கட்டளையைச் சேர்ந்த பேராசிரியை நாச்சியார் அம்மா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் இதற்கு முழு நிதியுதவி தந்த அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த Dr. நளாயினி சிவராமன் அவர்களை நாங்கள் மனமார பாராட்டுகிறோம்.இந்நிகழ்வு போல் பலவிதத்திலும் எங்களுக்கு ஒத்தாசை புரிந்த அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த இந்திரி சின்னையா அவர்களுக்கும் இவ் உதவியை வழங்கிய Dr. நளாயினி சிவராமன் அவர்களுக்கும் இதில் பங்கு பற்றிய எல்லோருக்கும் அம்பாளின் அருள் கடாட்சம் கிடைக்கும் என்று வாழ்த்துகின்றோம் மேலும் மேலும் இனிய நண்பர்களும் இவ்வாறான உதவிகளைச் செய்து அம்பாளின் அருள் ஆசியை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம் நன்றி

bottom of page