AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
MEESALAI
AANMEEGA ARAKADDALAI
LATEST EVENT - October 1, 2022
தமிழ்: இன்று 1லாம் திகதி ஓக்ரோபர் மாதம் 2022 நவராத்திரி நன்நாளில், மீசாலை சோலையம்மன் ஆலய முன்றலில் ஆலய பிரதம குரு அவர்களின் ஆசியுடன் தென்மராட்சி பிரதேசத்தில் இரண்டாவது அறக்கட்டளையாக மீசாலை ஆன்மீக அறக்கட்டளை உருவாக்கமும் தொடர்ந்து தலைவர் பொருளாளர் தலைமையிலும் பனையடி பிள்ளையார் ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் சிறிஸ்கந்தராசா அவர்களின் பங்களிப்புடனும் தெரிவு செய்யப்பட்ட 50 பெண் தலைமை மற்றும் முதியோர் குடும்பங்களுக்கு 2000/- பெறுமதியான உலர் உணவு பொதிகளும் 2 தென்னம்பிள்ளைகளும் 2 வகையான பயிர் விதைகளும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் 4 வகையான வாழ்வாதார செயற்பாடுகளும் அறக்கட்டளை அமைப்பினரால் அடையாளப்படுத்தப்பட்டு ஆயத்தமாக்கிய பின் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்துகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நிதியாளர்களான ரொரோன்டோ வில் வசித்த அமரர் திரு துரைராஜா அவர்களின் உறவுகளான திருமதி ராசநாயகி திரு முகுந்தன் அவர்களினதும் மற்றும் அமரர் கப்டன் திரு அருணாசலம் சிவநந்தன் அவர்களின் உறவான லண்டனில வசிக்கும் .ரவிந்திரன் செல்வராஜா அவர்களினதும் இணைந்த நிதியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.