AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
Latest Project: Mannar Sarvamatha Aanmeega Arakattalai
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள பள்ளங்கோட்டை கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள புதுக்காடு கிராமத்திற்கு யாழ்ப்பாணம் இந்து ஆன்மீக அறக்கட்டளை நிதியம் மற்றும் மன்னார் சர்வமத ஆன்மீக அறக்கட்டளை இணைந்து ஏழு இலட்சம் ரூபா பெறுமதியில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் விநியோகம் (RO water purification system) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21.04.2024)நடைபெற்ரது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல் இளங்கோவன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜி. விக்ரர் சமூர்த்தி உத்தியோகத்தர் அன்பழகன் அப்பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் இரு கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்கள் பயன்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கிராமங்களில் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனையாக சிறுநீரக நோய்க்கு ஒரு காரணியான சுத்தமான குடிநீர் இன்மை என்ற சமூகப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு RO water purification system அமைத்ததன் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது என்று மக்கள் தெரிவித்துள்ளார்கள்